ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மேற்பரப்பில் ஆய்வுக்கு நடுவே, விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்தது. நிலவின் தரையில் இறங்கி நகர்ந்து வரும் பிரக்யான் ரோவர் தனது கேமரா மூலம் விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. பிரக்யான் ரோவர் எடுத்துள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரின் திசை, பாதையை கண்டறிய பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.