குஜராத்: சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாக பொய்கூறிய குஜராத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்ரோ விஞ்ஞானி என்றும் விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாகவும் செய்தியாளர்களுக்கு மிதுல் திரிவோதி பேட்டியளித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிபோல் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளார். மோசடியில் ஈடுபட்டு சூரத் போலீசால் கைதான மிதுல் திரிவேதி டியூசன் ஆசிரியர் ஆவார்.