அமராவதி: விஜயவாடா – காசிபேட் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், நாளை இரவு 9.25 மணிக்கு புறப்படும் அகமதாபாத் – சென்னை சென்ட்ரக் நவஜீவன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – ஷாலிமர் கோரமண்டல் விரைவு ரயில் இன்று ரத்தாகியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் சார்மினார் விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படும் ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி மைசூரில் இருந்து ஹவுரா புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.