விஜயவாடா: விஜயவாடாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை 2-வது நாளாக முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து வருகிறார். வெள்ள பாதிப்புகளை படகு மூலம் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். ஆந்திராவில் 200 ஆண்டுகள் இல்லாத கனமழை பொழிந்துள்ளது. 2 நாட்களாக பெய்த கனமழையால் தென் கடலோர ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.