சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை தான் செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி எந்த சந்தேகமும் இல்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் நாளை கீழ்ப்பாக்கம் அல்லது தாம்பரம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.