சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தையால் கைதான 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் மீனவர்கள் சென்ற படகை விடுவிக்க முடியாது என அந்த அரசு கூறியுள்ளது.
படகை விடுவிக்க 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ஆயிரம் அபராதம் கட்டினால் மீட்க முடியும் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மாலத்தீவு அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகை அபராதம் இல்லாமல் இல்லாமல் மீட்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.