Friday, March 1, 2024
Home » கலைஞர் இறந்த போது அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்

கலைஞர் இறந்த போது அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்

by Neethimaan


சென்னை: திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைந்த போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து கண்ணீர் மல்க கருணாநிதியின் மறைவுக்கு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிற்கு கூட செல்லாமல், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு தனது மனைவி பிரேமலதாவுடன் வந்தார். அங்கு அவர் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.

அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்போரையே கலங்க வைத்தது. அந்த அளவுக்கு கலைஞர் மீது விஜயகாந்த் மரியாதையும், நட்பும் வைத்திருந்தார். விஜயகாந்துக்கும், பிரேமலதாவுக்கும் 1990ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கலைஞர் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi