சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.