சென்னை : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.