சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் குறித்த த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “குழந்தைகள் விஜயை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு. ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும். தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை. மனித நேயமும் அல்ல. திரு.வேல்முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..”என்றார்.
த.வெ.க. தலைவர் விஜய் குறித்த த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு தமிழிசை கண்டனம்
0