Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

“முதல்வர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார்” - அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் விளாசல்

சென்னை: முதல்வர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். "நீண்ட இடைவெளிக்கு பின் ஜெயக்குமார், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் சிரித்த முகத்துடன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புதுமாதிரியான ஒன்று இல்லை. அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுகிறார் விஜய்.

இன்னும் சினிமா சூட்டிங் போலவே முதலமைச்சர் நடந்து கொள்கிறார்; இடைத்தேர்தலை மனதில் கொண்டு முதலமைச்சர் பேசி இருக்கிறார். ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுகிறார் விஜய். "கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க.. கோழி திருடனை பக்கத்துல வச்சிக்கிட்டு ஊரெல்லாம் தண்டோரா போட்டானாம்.. அந்த மாதிரி தான் ஊழலை ஒழிக்கணும்னு பேசுறாரு.. என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; கரூரில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு விஜய் தனது சொந்த பணத்தில் தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே. கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல பல விஜய்யின் செயல் உள்ளது என்றும் கூறினார்.