ஈரோடு: ஈரோட்டில் தமமுக மாநில தலைவர் ஜான்பாண்டியன் நேற்று அளித்த பேட்டி: தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். எல்லோரும் இணைந்தால் ஓசை கிடைக்கும். அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில்தான் தமமுக முடிவு செய்யும். கூட்டணி ஆட்சியில் நாங்களும் பங்கு கேட்போம். ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சியானது. இது போன்று, தமிழ்நாட்டில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் குழந்தை; பிறந்து தவழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் நிலையில், அக்கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
விஜய் தவழும் குழந்தை: ஜான் பாண்டியன் கிண்டல்
0
previous post