சென்னை: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 38 அணிகள் களம் காண உள்ள இந்தப் போட்டியில் தமிழ்நாடு, டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணியை நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்ஏசி) அறிவித்துள்ளது. வழக்கம் போல் இடஒதுக்கீடு அடிப்படையில் வட மாநில வீரர்களும் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்துள்ளனர்.
* அணி விவரம்: சாய் கிஷோர்(கேப்டன்), நாரயண் ஜெகதீசன்(துணை கேப்டன்), பாபா இந்தரஜித், ஆந்த்ரே சித்தார்த், ஷாருக்கான், முகமது அலி, தீபேஷ், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர், அஜித் ராம், அச்யூத், பிரணவ் ராகவேந்திரா, பூபதி வைஷ்ணவ குமார், துஷார் ரஹேஜா, சந்தீப் வாரியர், பிரதோஷ் ரஞ்சன் பால்.


