விசாகப்பட்டினம்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் 5வது சுற்றில் நேற்று தமிழ்நாடு – விதர்பா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 48.4 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் பறி கொடுத்து 256 ரன் சேர்த்தது.
அதையடுத்து 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா ஆடியது. அந்த அணியின் கேப்டன் கருண் நாயர் 111 ரன் விளாசியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா வெற்றி பெற்றது. இதையடுத்து, தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகளுடன் டி பிரிவில் விதர்பா முதல் இடத்தில் தொடர்கிறது.