வியட்நாம்: வியட்நாம் போரை நிற்கவைக்க காரணமாக சொல்லப்படும் நேபாம் கேர்ள் புகைப்படத்தை எடுத்தது யார்? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 1955 முதல் ரஷ்யா, சீனா ஆதரவுடன் வடக்கு வியட்நாமும், அமெரிக்கா ஆதரவுடன் தெற்கு வியட்நாமும் மோதி கொண்ட வியட்நாம் போர் உலகின் நீண்ட போர்களுள் ஒன்று. 1973ல் டிராங் பேங் கிராமத்தில் கொத்து கொத்தாக வணிகர்களை கொல்லும் குண்டுகள் வீசப்பட்ட புகை கூட்டம் சூழ உடைகள் எறிந்து தீ காயங்களுடன் இரு கைகளையும் நீட்டி கொண்டு அலறியபடியே ஒரு சிறுமி ஓடி வந்தால். போரின் கோரமுகத்தை உலகிற்கு காட்டிய இக்காட்சி, கேமராவால் வரலாற்று சாட்சியானது.
உலகின் ஆன்மாவை உலுக்கி போரை நிற்கவைத்த இப்புகைப்படத்துக்காக அசோசியேட்டர் பிரஸ் நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் நிக் வுட், 1973ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது பெற்றார். 50 ஆண்டுகள் கழித்து புகைப்படத்தல் சர்ச்சை வெடித்திருக்கிறது. பல ஆய்வு நடத்தி உலகை உலுக்கிய இப்புகைப்படத்தை நிக் வுட் எடுக்கவில்லை என்று கூறி அண்மையில் ஆவணப்படம் வெளியானது. இதனை ஏற்று நேபாம் கேர்ள் புகைப்படம் மீதான நிக் வுட்டின் உரிமையை வேர்ல்டு பிரஸ் போட்டோ ரத்து செய்திருக்கிறது. நுயன் ஹான்கே போர் காட்சிகளை புகைப்படம் எடுத்து பணத்துக்காக விற்று வந்ததாகவும் அவர் எடுத்த புகைப்படத்தையே நிக் வுட் தான் எடுத்ததாகவும் கூறி வெளியிட்டதாகவும் கூறியிருக்கிறது. ஆனால், அப்புகைப்படத்தை நுயன் ஹான்கே தான் எடுத்தார் என்பதற்கு என்ன சாட்சி என கேட்டு நிக் வுட்டுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது அசோசியேட் பிரஸ்.