சென்னை: துணை வேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்தது மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மாநில பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை பின்பற்றினால் போதுமானது. ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது மரபு மற்றும் விதிக்கு முரணானது என்று அவர் கூறினார்.