சென்னை: துணைவேந்தர் நியமன அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் வெங்கடாசலபதி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக சட்டப்பிரிவுகள் உள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை தமிழக அரசே தேர்வு செய்யும் மசோதா அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனம்தொடர்பான நடவடிக்கையை தமிழக அரசே மேற்கொள்ள சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
துணைவேந்தர் நியமன அதிகாரம்: ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
0