சென்னை : பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க கைத்தறித்துறை டெண்டர் கோரியது. விசைத்தறி சேலைகளுக்கு 3050 மெ.டன் பருத்தி கலர் கோன் நூல் வாங்க டெண்டர். விசைத்தறி வேட்டிகளுக்கு 3597 மெ.டன் பாலிகாட் கிரே பாவு நூல் வாங்க டெண்டர் கோரப்பட்டது. இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 100 கோடி ஒதுக்கீடு செய்து சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.