சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கருவூல கணக்குத்துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் கணக்கர் பணிக்கு தேர்வான 537 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கருவூலக் கணக்குத்துறையில் பணிபுரிந்து மறைந்த பணியாளர்களின் வாரிசுகள் 10 பேருக்கு பணி ஆணையை முதல்வர் வழங்கினார்.