வெனிசுலா: வெனிசுலாவில் செல்லப் பிராணிகளை பாதுகாக்க வலியுறுத்தி விதவிதமான ஆடைகளை அணிந்த நாய்களுடன் அதன் உரிமையாளர்கள் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர். வெனிசுலாவில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக செல்ல பிராணிகளின் அடிப்படை தேவைகளுக்கு பணம் செலுத்துவது கூட கடினமாக உள்ளது. இதனால் செல்ல பிராணிகளை வளர்ப்பதை நிறுத்திவிட்டு தெருக்களில் விடுவது அதிகரித்துள்ள நிலையில், செல்ல பிராணிகள் தங்கும் இடங்களுக்கு ஆதரவு தர வலியுறுத்தி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
4 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற பந்தயத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்த நாய்களுடன் அதன் உரிமையாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற செல்ல பிராணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தலா 2,500 ரூபாய் செலுத்தினர். இந்த நிதியை திரட்டி கைவிடப்பட்ட செல்ல பிராணிகளுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.