சென்னை: வெம்பக்கோட்டை அகழாய்வில் சீறும் திமில் உள்ள காளை உருவத்துடன் சூதுபவள மணி பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். “சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும். கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறித்த பதக்கங்கள் கிடைத்தன. கீழடியில் காட்டுப்பன்றி உருவமும் முசிறியில் பாயும் சிங்கமும் பொறித்த பதக்கங்கள் கிடைத்தன” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.