வேலூர்: வேலூர் சாரதி மாளிகை பின்புறத்தில் கட்டிய இலவச கழிவறையை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ேவலூர் சாரதி மாளிகை, நேதாஜி மார்க்கெட், மண்டி வீதி ஆகியவற்றிற்கு தினமும் ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதற்காக அப்பகுதிகளில் சில இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டது. சாரதி மாளிகை பின்புறத்தில் ஒவ்வொரு மாடியில் இருந்தபடியே கழிவறைக்கு செல்லும் வகையில், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக 3 மாடி கொண்ட இலவச கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இது கட்டப்பட்டது முதல் பூட்டியே கிடக்கிறது.
பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கழிவறை திறக்கப்படாததால் அப்பகுதியில் திறந்தவெளியை பலர் கழிவறையாக பயன்படுத்துகின்றனர். மேலும் இந்நிலையில் இதன் அருகே மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கட்டண கழிவறை டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இலவச மாடி கழிவறை கட்டிடத்தை உடனடியாக திறக்க மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்து மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.