Saturday, March 2, 2024
Home » வேலூர் அலமேலுமங்காபுரம் பள்ளி அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட மாத்திரைகள் தீ வைத்து எரிப்பு

வேலூர் அலமேலுமங்காபுரம் பள்ளி அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட மாத்திரைகள் தீ வைத்து எரிப்பு

by Suresh

வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வீசப்பட்ட காலாவதியான மாத்திரைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வேலூர் அலமேலுமங்காபுரத்தில் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் மற்றும் அங்குள்ள கால்வாயில் காலாவதியான மாத்திரைகள் அதிகளவு வீசப்பட்டிருந்தது. சாலையோரம் வீசப்பட்ட மாத்திரைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து ‘தமிழ்முரசு’ மாலை நாளிதழில் கடந்த 5ம்தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதற்கிடையில் சாலையோரம் வீசப்பட்டடிருந்த காலாவதியான மாத்திரைகளை யாரோ மர்ம நபர்கள் இன்று காலை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டது. மேலும் பள்ளி அருகே தீ வைத்த எரிக்கப்பட்டதால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். காலாவதி மாத்திரைகளை வீசியவர்கள் யார், இதற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi