திருப்பத்தூர்: வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை தள்ளிவிட்ட ஹேமராஜ் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி உத்தரவின் பேரில் ஹேமராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஹேமராஜ் மீது கொலை முயற்சி, பாலியல் தொல்லை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.