வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பெற்றோரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. தலைமறைவாக இருந்த சிசுவின் பெற்றோர் ஜீவா (எ) சேட்டு, டயானாவை காவல்துறையினர் பிடித்தனர். குழந்தையின் மரணத்தில் சந்தேகமடைந்த தாத்தா, காவல்நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.