Monday, December 2, 2024
Home » வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்: மேலும் சிறை காவலர்கள் 11 பேர் சஸ்பெண்ட்

வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்: மேலும் சிறை காவலர்கள் 11 பேர் சஸ்பெண்ட்

by MuthuKumar

வேலூர்: வேலூர் சிறை கைதி சிவகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் தனி சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆயுள்தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர தயாள் உத்தரவிட்ட்டார். இந்த நிலையில் மேலும் சிறை காவலர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

eighteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi