Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கத்தியை காட்டி மிரட்டி ஸ்வீட் கடை உரிமையாளரிடம் பணம் பறித்த இருவர் கைது

கே.வி.குப்பம், மே 9:கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்(20), ரமேஷ் மகன் ரிதீஷ்(20) ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ம் தேதி லத்தேரி பகுதியில் உள்ள ஸ்வீட் கடையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர். தொடர்ந்து, அன்றிரவு கடை உரிமையாளர் வீட்டுக்குச் செல்லும்போது அவரை, சதீஷ், ரிதீஷ் ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர்.இதுகுறித்து கடை உரிமையாளர் லத்தேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைறைவாக இருந்த இவரையும் தேடி வந்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த சதீஷ், ரிதீஷை நேற்று முன்தினம் இரவு லத்தேரி போலீசார் கைது செய்தனர்.