நாகப்பட்டினம்: சிலம்ப போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு சென்றனர். இதில் 13 மாணவர்கள் பயிற்சியாளருக்கு தெரியாமல் நேற்று கடலுக்கு சென்று குளித்தனர். இதில் 3 பேர் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விஷ்வா (11), வீரமலை (13) ஆகியோர் உயிரிழந்தனர்.