சென்னை: சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெருமளவு புகை வெளியேறி வருகிறது. இதனால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.