சென்னை: வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 55,000 மணல் லாரிகள் இயங்காது என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மணல் லாரிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.