கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக பழனிசாமி முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் ஆஜரானார். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜரானார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கடந்த 2022 முதல் சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
கோடநாடு வழக்கு – வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜர்
0