நாகை: வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்கள் 9பேரை தாக்கி ரூ.5லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. தாக்குதல் சம்பவம் குறித்து கடலோர காவல் குழும காவல்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.