நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு ஓட்டை விழுந்து நீரில் மூழ்கியது. நீரில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படகில் இருந்த 11 பேரும் மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். வேதாரண்யம் அருகே விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.