Thursday, April 25, 2024
Home » வி.சி.க. சின்னம் தொடர்பாக இன்றே தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

வி.சி.க. சின்னம் தொடர்பாக இன்றே தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

by Neethimaan

சென்னை: வி.சி.க. சின்னம் தொடர்பாக இன்றே தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீது தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால் வி.சி.க.வுக்கு ஒதுக்க வேண்டும்.

2 தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டால் ஏற்கனவே போட்டியிட்ட சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு இந்த விசாரணைக்கு வந்தது. அப்போது; வி.சி.க. சின்னம் தொடர்பாக இன்றே தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களில் பானை சின்னத்தில் வி.சி.க. போட்டியிட்டிருந்தது. சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

10 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi