திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் அனைத்து அர்ச்சகர்களையும் அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நியமித்த 2 அர்ச்சகர்களை கோயில் குடமுழுக்கு விழாவில் அனுமதிக்கவில்லை. யாகசாலை பகுதிக்கும் அனுமதிக்கப்படவில்லை என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றச்சாட்டியுள்ளார். அர்ச்சகர்கள் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என முதல்வருக்கு வாஞ்சிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.