டெல்லி: பல்வேறு காரணங்களால் இன்று ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் 6 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி – துபாய், டெல்லி – வியன்னா, டெல்லி – பாரீஸ், அகமதாபாத்-லண்டன், பெங்களூரு – லண்டன், லண்டன் – அமிர்தரசஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக அகமதாபாத்-லண்டன் சேவையை அறிவித்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான பயணிகளுக்கு ஓட்டல் வசதியை வழங்கியிருக்கிறோம். பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், முழு கட்டண தொகையையும் திருப்பி தரவோ அல்லது பயணிகள் விரும்பினால், மீண்டும் விமான பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தவோ தயாராக இருக்கிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.