விழுப்புரம்: புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் போலீசார் நேற்று திடீரென வானூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடி சோதனை நடத்தினர். போலீசாரை கண்டவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சார் பதிவாளர் சடகோபன், அலுவலக ஊழியர்கள், ஆவண எழுத்தாளர்கள் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.