Friday, April 19, 2024
Home » வான்கோ!

வான்கோ!

by Porselvi

இன்ஸ்டாகிராம், யூடியூப் என எங்கும் எதிலும் சமீபத்திய டிரெண்ட் இந்த ‘வான்கோ’ அனுபவம்தான். உலகம் முழுக்க பிரபலமாக இந்தக் கண்காட்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி என்ன அனுபவம் என்னும் எதிர்பார்ப்புடன் உள்ளே சென்றால். வேறு ஒரு உலகமாக நம் கண்களைக் கட்டிப் போடுகிறது இந்த ‘வான்கோ’. ‘வின்சென்ட் வான்கோ… 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர். இவரை இந்தியா அதிகம் அறிந்துகொண்டது பிரபல இந்தி நடிகர் சுஷந்த் சிங் மறைவின் போதுதான். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது சமூக வலைத்தளப் புகைப்படமாக இவரின் ஓவியமான ஸ்டேரி நைட்‘ படத்தைத்தான் வைத்திருந்தார். போராடி, தனது வாழ்வின் கடைசிக் காலத்தை மனநலக் காப்பகத்தில் கழித்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தவர் ஓவியர் வின்சென்ட் வான்கோ. ஆனால் அவரின் ஓவியங்கள் அனைத்தும் உலகப் பிரபலம். இவரின் ஓவியங்களைக் கொண்டு கண்களைக் கவரும்படி 360 டிகிரியில் சுழலும் காட்சிகளை நம்மை சுற்றி உருவாக்கி பார்வையாளர்களைக் கட்டிப்போடுவதுதான் இந்த வான்கோ கண்காட்சியின் முக்கியம்சம்.

தனது 27 வது வயதில் ஓவியராக மாற வேண்டும் என ஆர்வம் கொண்டு ஓவியத்தின் நுணுக்கங்களுக்குள்ளேயே தன்னையும் தொலைத்த ஒரு ஏழை ஓவியர்தான் வான்கோ. இவரின் ஓவியங்கள் அத்தனையும் அவரது வாழ்வியலையும் அவரையும் பிரதிபலிக்கும் பிம்பங்கள் ஆகவும் இன்றும் உலக அளவில் கோடிகளில் விற்றுக்கொண்டிருக்கின்றன. இவரது ஓவியங்கள் பலவும் ஓவிய பிரஷ்களின் அச்சுக்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஓவியங்கள். மேலும் தன்னைத் தானே 37 சுய ஓவியம் தீட்டிக் கொண்ட ஓவியரும் இவரே. அனிமேஷன் செய்து, உருவங்களை அசைத்து, தனியாக பிரித்து எனக் கண்களுக்கு விருந்தாக படைப்பதே இந்த வான்கோ அனுபவக் கண்காட்சி. சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இந்தக் கண்காட்சி மார்ச் மாதம் 17ம் தேதி வரை நடக்கும்.

– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

five + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi