வாணியம்பாடி அருகே விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறை விரைந்து செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம்ச்சாட்டியுள்ளனர். தொடர் விபத்துகளுக்கு டாஸ்மாக் தான் காரணம் என கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெறுவதால் டாஸ்மாக் கடையை மூட காவல்துறையினர் உத்தரவிட்டனர்.