*போலீசார் விசாரணை
வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே வெட்டு காயத்துடன் நாய் உயிருக்கு போராடி கொண்டியிருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த பெரியகுறும்ப தெருவை சேர்ந்தவர் சகாதேவன்(50). இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த நாயை அதேபகுதியை சேர்ந்த ஒருவர் அறுவாளை கொண்டு வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், நாயின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயமடைந்து அதிக ரத்தம் வெளியேறி உயிருக்கு துடிதுடித்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சகாதேவன் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார். ஆனால், நாய் அவரை அருகே சேர்க்கவில்லை. இதுகுறித்து சகாதேவன் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வாணியம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.