டெல்லி: வந்தே வாரத் ரயில் சேவை மூலம் தொழில் வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைத்தார் . மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரயில்களின் சேவை உதவும். வந்தே பாரத் ரயில் சேவையால் தொழில்கள் வளரும்; வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழகத்தின் கோயில் நகரையும், கர்நாடகாவின் ஐ.டி. நகரையும் வந்தே பாரத் ரயில் இணைக்கும்.