சென்னை: புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை உருவாக்க பன்னாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் அளித்துள்ளது. ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.சி.எஃப் ஊழியர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிடாகர் வேகன் என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்ததற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.