தென்காசி : சரக்கு வேன், லாரிகளில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை சரக டிஐஜி மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசியில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.