பாலக்காடு : கேரள மாநிலம் திருச்சூர் அருகே குரியச்சிறை பகுதியில் 1,575 லிட்டர் எரி சாராயம் கடத்திய பிக்கப் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேன் டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.திருச்சூர் கலால்துறை ரேஞ்சு அதிகாரி பிரசாத் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது திருச்சூர் டவுன் பகுதியிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற பிக்கப் வேனை தடுத்துள்ளனர்.
அப்போது டிரைவர் வேனை நிறுத்துவது போல் பாசாங்கு செய்து வேனை இயக்கி வேகமாக சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காவலர்கள் ஜீப் மூலமாக பின் தொடர்ந்து வேனை தடுத்துள்ளனர். வேனை நிறுத்தியவர் வேனை விட்டு தப்பி விட்டார்.
இதனைத் தொடர்ந்து வேனை சோதனை செய்தபோது பழைய பொருட்களுக்கு அடியில் 45 கேன்கள் 1575 லிட்டர் எரி சாராயம் மற்றும் வேன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கலால்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.