மண்டபம்: விருத்தாச்சலம் காட்டுப்பரூர் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக குழந்தைகள் உள்பட 22 பேர் நேற்று அதிகாலை வேனில் வந்தனர். அதேபோல ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த 4 பேர் காரில் சென்றனர். 2 வாகனங்களும் ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் பகுதியில் வந்தபோது நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் காரில் வந்த ஐடி ஊழியர் வெங்கடேஸ்வரன் (27), வேனில் வந்த விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் மகள் மகாலட்சுமி (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பொதுமக்களே 2 வாகனங்களிலும் காயமடைந்த 18 ஆண்கள், 6 பெண்கள் ஆகிய 24 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் (21) இறந்தார்.
வேன்-கார் பயங்கர மோதல் ஐடி ஊழியர் உள்பட 3 பேர் பலி: 23 பேர் படுகாயம்
0