செய்யாறு: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா செங்கனாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30), வேன் டிரைவர். இவர் செங்கனாவரம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 15 பெண் தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் தனியார் கம்பெனிக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.
அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி தனியார் பஸ் வந்தது. திருப்பணமூர், வெங்கட்ராயன் பேட்டை பகுதியில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் வேன் டிரைவர் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.