வால்பாறை: வால்பாறை பகுதியில் கடும் வெயில் பாதிப்பில் வனப்பகுதிகள் வறண்ட நிலையில், வன விலங்குகள் மழையில் நனைந்தவாறு சிற்றோடை பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. காட்டு மாடுகள் நேற்று பெய்த மழை காரணமாக நீர்நிலைபகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளது. தொடர் மழை காரணமாக சிற்றோடைகளில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து காட்டு மாடுகள் நீரோடை பகுதிகளுக்கு சென்ற வண்ணம் இருந்தது.
லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் காட்டு மாடுகள் நேற்று மழை பாறைமேடு பகுதியில் புற்கள் காய்ந்த நிலையில், சிற்றோடை பகுதியில் மழை நனைந்தவாறு சென்று மேய்ச்சலில் ஈடுபட்டது. மேலும் மழை காரணமாக யானை, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளும் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.