கோவை: வால்பாறை அருகே 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் 20ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது. வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை அதில் பிடிபட்டது.