சென்னை: டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைத்து கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது. வள்ளுவருக்கு காவிச்சாயம் பூச சில கும்பல் நினைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0