வல்லாரைக்கீரை – ஒரு கிண்ணம்
பூண்டு – 2 பல்
தேங்காய்த் துருவல் – கால் கிண்ணம்
காய்ந்த மிளகாய் – 5
எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு, வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.